போலி பேராசிரியர்கள் வாழ்வில் விழுந்தது பேரிடி... தீர்மானம் போட்டது சிண்டிகேட்...!

published 5 months ago

போலி பேராசிரியர்கள் வாழ்வில் விழுந்தது பேரிடி... தீர்மானம் போட்டது சிண்டிகேட்...!

தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்காமல், போதுமான பேராசிரியர்கள் இருப்பதாகக் கூறி, வெவ்வேறு கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியர்களைப் பெயரளவுக்குக் கணக்குக் காட்டி மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் பேராசிரியர்கள் பலருக்கு தொடர்புள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.

இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பெயரைப் பதிவு செய்த 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பதாகவும், மோசடியாக ஆசிரியர்களைக் கணக்குக் காட்டிய 295 தனியார் கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் போடப்பட்டது.

சிண்டிகேட்டின் இந்த தீர்மானத்தால், கல்லூரியில் வேலை செய்வதாக தங்கள் பெயரை மட்டுமே கொடுத்து சிக்கலில் சிக்கிக் கொண்ட பேராசிரியர்கள் கதிகலங்கியுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe