கோவையில் 80 வயது மூதாட்டியிடம் ரூ.2.5 கோடி மோசடி!

published 5 months ago

கோவையில் 80 வயது மூதாட்டியிடம் ரூ.2.5 கோடி மோசடி!

கோவை: கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பான (சி.பி.ஐ.) அதிகாரி என்று கூறிக்கொண்டு வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் வந்தது.

அதில் பேசிய நபர் உங்கள் பெயரில் அனுப்பப்பட்ட ஒரு பார்சல் கூரியர் நிறுவனத்தில் உள்ளது. அந்த பார்சலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், சர்வதேச சிம் கார்டுகள் மற்றும் போலி பாஸ்போர்ட்கள் போன்ற சட்டவிரோத பொருட்கள் இருப்பதாக கூறினார்.

அத்துடன் இந்த பார்சல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் உங்கள் வங்கி பரிவர்த்தனைகளை சோதனை செய்ய வேண்டும். எனவே தற்போது உங்கள் வங்கி கணக்குகளில் இருந்து அனைத்து பணத்தையும் நாங்கள் அனுப்பும் காவல்துறை வங்கிக் கணக்கு எண்களுக்கு மாற்றுமாறு அறிவுறுத்தினார்.

அதை சரி செய்தவுடன் உங்கள் பணம் திரும்ப செலுத்திவிடுவோம் என்றும் கூறி உள்ளார். இதை உண்மை என்று நம்பிய அந்த மூதாட்டி பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் ரூ.2 கோடியே 50 லட்சத்தை அந்த ஆசாமி குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பினார்.

இதையடுத்து மூதாட்டி அந்த ஆசாமியை தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் அவரால் தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் ஆன்லைன் மோசடியில் சிக்கியதை உணர்ந்தார்.

பின்னர் அவர் இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் அருண் விசாரணை நடத்தி வருகிறார்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe