கோவையில் அரசு மேல்நிலை பள்ளியில் STEM ஆய்வகம் திறப்பு...

published 5 months ago

கோவையில் அரசு மேல்நிலை பள்ளியில் STEM ஆய்வகம் திறப்பு...

கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள (SCIENCE TECHNOLOGY ENGINEERING MATHEMATICS) STEM ஆய்வகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி திறந்துவைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் ஜிடி நாயுடு அறக்கட்டளை அறங்காவலர் அகிலா சண்முகம், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி. வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாச்சலம், மாவட்டக் கல்வி அலுவலர் மகேஸ்வரி பேரூராட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் 
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகள் உள்ளன. அவற்றில் STEM ஆய்வகம் அமைக்க ஐந்து பள்ளிகள் தேர்வு செய்ய நினைத்தபோது, எந்த பள்ளிகளில் ஆய்வகம் கொண்டுவந்தால் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆர்வமுடன் பங்குகொள்வார்கள் என்பது குறித்து ஆய்வு செய்து பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட ஐந்து பள்ளிகளில் வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றாகும். இந்த பள்ளியில் சில வகுப்பறைகள் முன்னாள் மாணவர்களால் கட்டப்பட்டுள்ளன. தேவையான உட்கட்டமைப்புகளை உருவாக்கும் விதத்தில் இந்த ஆய்வகம் ஜி.டி நாயுடு அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஜிடி. நாயுடு அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்காதவர். ஆனால் பல்வேறு கண்டுபிடிப்புகளை தானே உருவாக்கி சாதனை படைத்துள்ளார். காரணம் தொடர்ந்து, ஆராய்ச்சிகள் மூலம் பல சாதனங்களை அவரே செய்து பார்த்து உருவாக்கினார்.

புத்தகங்களில்
படிப்பதை விட, யாராவது நமக்கு கற்று தருவதைவிட நாமே அதை ஆராய்ந்து.
அறிந்து கொள்ளும் போது அறிவு வளர்ச்சி அடையும். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு நீங்கள் போட்டித் தேர்வுக்கு தயாரவதாக
இருந்தாலும், வேலையை தேர்வு செய்வதாக இருந்தாலும், அங்கு கேட்கப்படும் வினாக்கள் எல்லாம் நீங்கள் படித்த திட்டங்கள், தேற்றம். விதிகள் உள்ளிட்டவை
தொடர்பான பயன்பாடு சார்ந்ததாக இருக்கும்.

நீங்கள் புத்தகத்தில் படித்தவைகள்
அப்படியே கேட்கப்படுவதில்லை.
இந்த ஆய்வகத்தை மாணவர்கள் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
வருங்காலத்தில் மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்தவர்களாக
விளங்கவேண்டும். இப்பள்ளிக்கு இந்த ஆய்வகத்தை அமைத்துகொடுத்த ஜி.டி
நாயுடு அறக்கட்டளைக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்
கொள்கிறேன் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe