நடிகர் விஜய்க்கு கோவையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடுத்த அட்வைஸ்...

published 1 week ago

நடிகர் விஜய்க்கு கோவையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடுத்த அட்வைஸ்...

கோவை: கோவை மாநகர மாவட்ட இந்து முன்னணி நடத்திய 37 ஆம் ஆண்டு விழா, விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் பொதுக் கூட்டம் தெப்பக்குளம் மைதானம் பகுதயில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார். 

பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர், 

விநாயகர் சதுர்த்தி விழாக்கள் தி.மு.க அரசாங்கத்திற்கு மிகப்பெரிய பயத்தை கொடுத்து இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மக்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. மக்கள் பா.ஜ.க-விற்கும் இந்து இயக்கங்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இதனால் நான் தோல்வி சந்தித்து விடுவோம் என்ற தோல்வி பயத்தால் தான் இவ்வளவு பெரிய  கட்டுப்பாடுகள் எல்லாம் விதித்து கொண்டு இருக்கிறார்கள்.

தி.மு.க வுக்கு - திருமாவளவன் ஏதாவது கோரிக்கை வைத்து இருக்கலாம் அதை தி.மு.க ஏற்றுக் கொள்ளாமல் இருந்து இருக்கலாம். கூட்டணியில் இருக்கக் கூடிய தி.மு.க வை மிரட்டுவதற்கான தொனியாக, யுக்தியாகத் தான் நான் பார்க்கிறேன். முதலமைச்சரை, வெளிநாடு செல், என் பேச்சைக் கேள் என மிரட்டும் தொனியாக தான் நான் பார்க்கிறேன்

திருமாவளவன் ஒரு சாதி சக்தி, தமிழ் மக்களுக்கான தலைவன் கிடையாது,  ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கான தலைவன் கிடையாது. அவர் ஒரு சமூகத்தின் தலைவர், அதனால் அவர் ஜாதியை பற்றி பேசுவதற்கு  சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இன்று தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் பட்டி, தொட்டிகள் எல்லாம் போதை பொருட்களான கஞ்சா மது கரை புரையோடி போயி இருக்கிறது. போதைப் பொருட்களை கடத்தி தி.மு.க வினர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மது ஆலைகளை நடத்துவது தி.மு.க வின் பெரிய நிர்வாகிகள், படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என்ற கூறி விட்டு இன்று டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டாச்சு இன்று மூலை முடுக்கலாம் மனமகிழ் மன்றங்கள் என தனியாருக்கும் இருக்கும் டாஸ்மாக் கடைகளை கொடுத்து விட்டார்கள். 

தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் பள்ளி இருக்கிறதோ இல்லையோ அங்கன்வாடி இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் கடை உங்களை அன்புடன் வரவேற்கிறது இன்றைக்கு தமிழ்நாட்டு நிலைமை அது தான். தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் முப்பதில் இருந்து 35 விளம்பரங்கள் இருக்கிறார்கள் எதற்கு யார் பொறுப்பு தி.மு.க தான் பொறுப்பு.

இளைய சமுதாயத்தை கெடுத்து சீரழித்துக் கொண்டு இருக்கிறது திராவிட மடல் அரசு. இந்த மது ஒழிப்பு மாநாடு வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்குள் பேரம் பேசுவதற்காக இருக்கலாம், ஒரு இறுக்கமான பேரம் பேசுவதற்காகவோ அல்லது மிரட்டல் தொனியாக கூட கடைப்பிடிக்கலாம்.

விஜய் சாய்பாபா கோவிலுக்கு செல்வது ஓகே. ஆனால் விநாயகர் சதுர்த்தி என்பது உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடும் விழா. நீங்கள் ஒரு பொது வாழ்க்கைக்கு வர வேண்டும் என விரும்புவர்கள் அனைத்து மதங்களின் அல்லது அனைத்து மக்களின் வழிபாட்டு விழாக்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்பது பொதுவாழ்வு இருப்பவர்களின் கடமை என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe