இறந்தால் தான் சாலையை சரிசெய்வீர்களா?- கோவை மாநகராட்சியை கண்டித்து போராட்டம்...

published 6 days ago

இறந்தால் தான் சாலையை சரிசெய்வீர்களா?- கோவை மாநகராட்சியை கண்டித்து போராட்டம்...

கோவை: கோவை மாநகரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக அமல்படுத்துதல், மாவட்டம் முழுவதும் சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை சீரமைத்தல், குப்பை வரியை ரத்து செய்தல், வீடுகளில் தினசரி குப்பை சேகரிப்பை உறுதி செய்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் போராட்டத்தின் போது பேசிய மார்க்சிஸ்ட் கட்சியினர், கடந்த ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தை எஸ்பி வேலுமணி சூறையாடினார் என்றும் ஓம் காளி! ஜெய் காளி! மாநகராட்சி கஜானா காலி! என்றாகிவிட்டது என்றும் இந்த முறை மாநகராட்சி கஜானாவை யார் காலி செய்து வருகிறார் என்று தெரியவில்லை என்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் அதை அனுமதிக்காது என்றும் கூறினர். சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் மூவர் விழுந்ததும் உடனடியாக அந்த குழி மூடப்பட்டது என்றும் செத்தால் தான் குண்டு குழியை மூடுவீர்களா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதனால் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த போராட்டக்காரர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe