அன்னபூர்ணா விவகாரம்- கோவையில் காங்கிரஸ் மாநில தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்...

published 4 days ago

அன்னபூர்ணா விவகாரம்- கோவையில் காங்கிரஸ் மாநில தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்...

கோவை:  உணவங்களில் உள்ள GST குளறுபடியை சரி செய்து கொடுங்கள் என்று கோரிக்கை வைத்ததற்காக தமிழ்நாட்டின் முன்னணி தொழிலதிபர் அன்னபூர்ணா சீனிவாசனை மத்திய நிதியமைச்சரிடம் நேரில் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்ட மத்திய பாஜகவை கண்டித்து  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் கோவை R.S புரம் காந்திபார்க் பகுதியில்ப்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் உரையாற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, 

கோவை அன்னபூர்ண உரிமையாளர் சீனிவாசனை மட்டும் அவமானப்படுத்தவில்லை
தமிழ்நாட்டில் உள்ள ஒட்டு மொத்த தமிழர்களின் அவமானப்படுத்தி உள்ளனர்.ஜனநாயகத்தை ஒடுக்கி அடக்கி ஆள வேண்டும் என்று நினைத்து வருகிறார்கள்.

சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு,தூத்துக்குடி வெள்ள பாதிப்பில் பார்வையிட்ட பிறகு தமிழகத்திற்கு ஒரு பைசா நிதி கூட வழங்கவில்லை. உண்டியலில் பணம் போட்டால் அரசுக்குச் செல்லும் ஆனால் ஐயர் தட்டில் பணம் போடு வேண்டும் என்று பக்தர்களை கோவிலில் வலியுறுத்தியுள்ளார்.

மெட்ரோ இரயிலுக்கு 2-ம் கட்டம் தவணை 7000 கோடி ரூபாய் தருவேன் என்று ஒப்புதல் போட்டால் ஆனால் தற்பொழுது தமிழ்நாட்டின் புறக்கணித்து வருகிறார்.ஆட்சியை தக்க வைப்பதற்காக சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாருக்கு லட்சக்கணக்கான கோடிகளை அள்ளிக் கொடுத்துள்ளார்கள்.
இந்த பிரச்சனை எல்லாம் வருகின்ற தேர்தலில் எதிரொலிக்கும் என கூறினார்.

இந்த அன்னபூர்ணா பிரச்சனை இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது.நிர்மலா சீதாராமன் கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe