கோவையில் சர்ச்சையை கிளப்பும் வகையில் ஒட்டப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி போஸ்டர்...

published 1 day ago

கோவையில் சர்ச்சையை கிளப்பும் வகையில் ஒட்டப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி போஸ்டர்...

கோவை: கோவை, அவிநாசி சாலை தண்டு மாரியம்மன் கோயில் எதிரில் ஒட்டப்பட்டு உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி போஸ்டர்களால் சர்ச்சையை கிளப்புகிற வகையில் உள்ளது.

அந்த போஸ்டரில் "2026ல் ஆட்சியிலும் பங்கு! அதிகாரத்திலும் பங்கு!!"

"கடைசி மனிதனுக்கும் சனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்!!" என்ற வாசகங்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளன.

இந்த போஸ்டரானது அக்கட்சியின் கோவை மாநகர் மாவட்ட தொண்டரணி சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியானது மதுவிலக்கு ஆதரவாக மாநாடு நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வரும் நிலையில் அப்போது கூட்டணி கட்சியில் இருந்து கொண்டே திமுகவை எதிர்ப்பது போன்று அந்த மாநாட்டை நடத்துவதாக பலரும் விமர்சித்து வரும் நிலையில் தற்போது ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe