அன்னபூர்ணா உரிமையாளர் கூறியதில் என்ன பாதகம் உள்ளது?- கோவையில் செல்வபெருந்தகை பேட்டி...

published 4 days ago

அன்னபூர்ணா உரிமையாளர் கூறியதில் என்ன பாதகம் உள்ளது?- கோவையில் செல்வபெருந்தகை பேட்டி...

கோவை: கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ்  கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், 

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி குறைதீர்க்கும் நாளில்  நடந்து கொண்ட விதம்,  சிறு நடுத்தர தொழில் செய்து ஒரு ஹோட்டல் உரிமையாளர் தனது கோரிக்கையை வைத்ததற்காக தனது அறையில் அழைத்து அவரை மன்னித்து கேட்க வைப்பதும் அவரை நடத்திய விதமும் எல்லோரையும் கலங்கடிக்க செய்துள்ளது.

அதிகாரத்தில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியினரிடம் பொதுமக்களிடம், வணிகர்களிடம் எவவாறுநடந்து கொள்ள வேண்டும் என  குறைந்த பட்ச நாகரிகம் தெரியாமல் இல்லாமல் இவ்வாறு செய்திருப்பது அனைவரையும் வருத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இதை காங்கிரஸ் பெயர் இயக்கம் பண்ணையார் வன்மையாக கண்டிக்கிறது அவர் என்ன பாதகம் செய்தார், என்ன கேள்வி கேட்டார்?

மூன்று மேசைகளில் ஜிஎஸ்டி அதிகாரிகள் இருப்பார்கள் அவர்களிடம் நிறைய குறைகள் இருந்தால் கூறுங்கள் என கூறியிருந்தார்கள். அதுதான் அன்னபூர்ணா சீனிவாசன் குறைகளை கூறியிருக்கிறார் இதில் என்ன பாதகம் இருக்கிறது.

சிறிய குழந்தைகள் கூட வாங்க போங்க என அழைக்கும் பண்புள்ள மண். அனைவருக்கும் மரியாதை சொல்லிக் கொடுக்கும் மண் கோவை. இந்த மண்ணில் இப்படியே அநாகரீகமான செயல் நடந்திருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இது அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் என்பதற்காக அல்ல அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகார தோரணையில் மிரட்டுவதும் மன்னிப்பு கேட்க வைப்பதும் அதை கேட்டதை பொது வெளியில் வெளியிடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே நேரத்தில் நிதின்கட்கரி நிதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் எவ்வளவு கேலி இருக்கிறது. எவ்வளவு கிண்டல் இருக்கிறது. எவ்வளவு கண்டனக் குரல்கள் இருக்கிறது.

நிதின்கட்கரியிடம் கோவை சட்டமன்ற உறுப்பினரும் நிதியமைச்சரும் ஒரு ஹோட்டல் அறையில் அமர்ந்து கொண்டு, அவரை வரச் சொல்லுங்கள்,கூனி குறுகி சாய்ந்து உட்காராமல் நுனி நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, நிதின்கட்கரி கேட்பாரா? அவர்களை கேட்க வைக்க முடியுமா? அதை வீடியோ பதிவு செய்து பதிவு செய்து  வெளியிடுவார்களா?

அப்போது நிதின்கட்கரிக்கு ஒரு நியாயம், சீனிவாசனுக்கு ஒரு நியாயமா? நிதின் கட்கரி விமர்சனம் செய்ததை விட அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் விமர்சனம் செய்து விட்டாரா?இருக்கின்ற குறையை கூறியிருக்கிறார். நிதின் கட்கரி விமர்சனம் செய்தார்.

நிதின் கட்கரி கேட்டதற்கும் அன்னபூர்ணா சீனிவாசன் கேட்டதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. சீனிவாசன் பண்பாக மிகவும் நாகரீகத்தோடு கேட்டுள்ளார்.

உள்ளூர்கார்ர்களையே இவர்கள் மன்னிக்க மாட்டேங்கிறார்கள்.உள்ளூர் காரர்களையே கிண்டல் ஏளனம் மன்னிப்பு கேட்க வைப்பது. இதை திரைப்படங்களில் மட்டும் தான் பார்த்திருக்கிறோம். திரைப்படத்தில் வில்லன்கள் படம் எடுத்து வைத்துக்கொண்டு பிறகு ஆவணமாக வெளியிடுவதைப் போல் தான் உள்ளது இது.

ராகுல்காந்தி பத்திரிக்கையாளர், மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னார். இது அமெரிக்காவுக்கும் உருத்தும் எங்கள் நாட்டில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது உங்கள் நாட்டில் செய்தால் நீங்கள் விட்டுவிடுவீர்களா எனக்கு ஏற்று இருக்கிறார் இதில் என்ன தவறு இருக்கிறது.

அண்ணாமலை மன்னிப்பு கேட்க்ககூடாது. அங்கிருந்த நிர்மலா சீத்தாராமன், வானதி சீனிவாசனும் கேட்கவில்லை. அண்ணாமலை தான் தேசத்திலே இல்லையே நாடு விட்டு நாடு  கடந்து போயிருக்கிறார்.


நாம் தாயாக பார்ப்பவர்கள் பெண்கள். நமது வீட்டுப் பெண்கள்
இவ்வாறு அவமானபடுத்துவதும் அசிங்கபடுத்துவதும் நமது வீட்டு பெண்கள் செய்வார்களா? இது அநாகரிகத்தின் உச்சம்.

திருமாவளவன் அவரது கட்சி விவகாரம் அவருடைய கருத்து எங்களைப் பொறுத்தவரை இந்திய கூட்டணி வலிமையாக இருக்கிறது இன்னும் வலிமை பெற்றுக் கொண்டிருக்கிறது.

முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக பேசிய செல்வந்தபெருந்தகை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி தமிழ்நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது என பதிலளித்தார்.

இந்தியா கூட்டணி என்பது பெரிய மகா சமுத்திரம் இந்த சமுத்திரத்தில் சில சில அலைகள் அடிக்கத்தான் செய்யும் கடைசியில் ஒளிந்து விடும். இந்தியா கூட்டணியை யாரும் அசைக்க முடியாது இது எஃகு கோட்டையை போன்ற கூட்டணி என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe