பசுமை தொழில் முனைவோர் திட்டம்- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு...

published 4 months ago

பசுமை தொழில் முனைவோர் திட்டம்- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு...

கோவை: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ், சுற்றுச் சூழலுக்கு உகந்த பசுமை செயல்பாடுகளை உருவாக்கி இலாபத்துடன் கூடிய உற்பத்தி, விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்திடவும், பொருளாதார ரீதியாக பசுமை தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்திடும் பொருட்டு "பசுமை தொழில் முனைவோர் திட்டம்" உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் நடத்தப்படும் பசுமை தொழில் நிறுவனங்கள் தேர்வு செய்து சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை தொழில் நிறுவனங்கள் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ், தேர்வு செய்யப்படும் தொழில் குறித்து தொழில் முனைவோர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

மேலும் விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் ஓராண்டிற்கு மேல் தொடந்து செயல்பாட்டில் இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் நிறுவனம் கட்டாயம் சிறு. குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அங்கீகாரம் மற்றும் GST பதிவு பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் தொழில் நிறுவனம் குறைந்த பட்சம் 3 வேலையாட்களை கொண்ட நிறுவனமாகவும் GEM இணையதளத்தின் மூலம் பதிவ செய்திருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் குறைந்த பட்சம் ரூ.4.00 இலட்சம் இருத்தல் வேண்டும். உதயம் சான்றிதழ், FSSI, FSSAI, TNPCB, CPE and CPO en O Q வேண்டும். தேர்வு செய்யப்படும் தொழில் நிறுவனங்களுக்கு 4.00 இலட்சம் வீதம் 3 கட்டங்களாக தொழில் வளர்ச்சி நிதியாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ், விருப்பமுள்ள தொழில் நிறுவனங்கள் வரும் 25.09.2024-ம் தேதிக்குள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊராக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe