வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பூஜைப் பொருட்கள் கடைக்குள் புகுந்த யானை...

published 4 months ago

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பூஜைப் பொருட்கள் கடைக்குள் புகுந்த யானை...

கோவை: தென் கைலாயம் என்று பக்தர்கள் போற்றப்படும் பூண்டி வெள்ளியங்கிரி சிவன் கோவில். கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பூண்டியில் கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. 

சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரம் செல்லும் மலைப் பாதையில் வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதை வனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்றவைகளை கடந்து சென்றால் 7 - வது மலையில் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க முடியும். இந்த மலைப் பாதை மிகவும் கரடு, முரடானதாக இருக்கும். இந்த மலைப் பாதையில் ஏற பக்தர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதம் வரை அனுமதி வழங்கப்படும். 

இந்த நாட்களில் ஏராளமானவர்கள்  மலையேற்றத்தில் ஈடுபடுவார்கள். கோவை மாவட்டம் அல்லாமல் சென்னை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள், முதியவர்கள் என பலர் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மே மாதத்திற்கு பிறகு பக்தர்கள் மலை ஏற அனுமதி இல்லை. இதை தொடர்ந்து அடிவார பகுதியில் அமைந்து உள்ள பூண்டி ஆண்டவர் சிவன் கோவிலில் வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். இதனால் அந்தக் கோவில் வளாகத்தில் சுற்றி பூஜை கடைகள், பொம்மை கடைகள் போன்றவை நடத்தி வருகின்றன. 

அதில் தேங்காய், பழம் உட்பட பூஜை பொருள்கள் விற்பனை செய்து வருகின்றன. இந்நிலையில் அங்கு வந்த ஒற்றைக் காட்டு யானை ஒன்று அங்கு இருந்த பூஜை கடைக்குள் புகுந்ததால் வியாபாரிகள் ஆலய அடித்து ஓட்டம் பிடித்தனர். 

அங்கு இருந்த பூஜை கடைகள், பொம்மை கடைகளை சூறையாடியது. இதனை அங்கு இருந்த பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். அந்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DASpMINAExL/?igsh=MnMxdWNqY3NxeXRx

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe