ஆர்ம் ரெஸ்லிஙில் மேட்டுப்பாளையம் சிறுவன் வெற்றி…

published 4 months ago

ஆர்ம் ரெஸ்லிஙில் மேட்டுப்பாளையம் சிறுவன் வெற்றி…

கோவை: ஆர்ம் ரெஸ்லிங்  விளையாட்டு போட்டியில், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சையது முஹையதீன், 16, வயது பள்ளி சிறுவன் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார்.

மேட்டுப்பாளையம் சி.டி.சி. பகுதியை சேர்ந்தவர் சையது முஹையதீன், 16, தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை பரூக், பூண்டு வியாபாரி. தாய் ஷக்கிலா பானு.

அண்மையில், சென்னையில் தனியார் விளையாட்டு அமைப்பு சார்பில் நடந்த, ஆர்ம் ரெஸ்லிங் என சொல்லப்படும் கை மல்யுத்தம் விளையாட்டு போட்டியில், சையது முஹையதீன் 18 வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார்.

இதுகுறித்து, சையது முஹையதீன் கூறியதாவது:-

சிறு வயதில் இருந்தே ஆர்ம் ரெஸ்லிங் மீது அதிகம் ஆர்வம் இருந்தது. இது தொடர்பான போட்டிகளை அதிகம் கண்டு ரசிப்பேன். பள்ளி நண்பர்கள், வீட்டில் உள்ள அப்பா, அண்ணன் உள்ளிட்டோரிடம் ஆர்ம் ரெஸ்லிங் விளையாடி மகிழ்வேன். இதுதொடர்பான போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சிறு வயதில் இருந்தே வீட்டில் உடற்பயிற்சி மேற்கொண்டு என்னை தயார்படுத்திக் கொண்டேன். அப்போது தான் எனது பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தீபக், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான ஆர்ம் ரெஸ்லிங் போட்டி தொடர்பாக தெரிவித்தார். 

நான் கலந்து கொள்ள முடிவெடுத்து, உடற்பயிற்சி கூடத்திற்கும் சென்று பயிற்சிகளை மேற்கொண்டேன். அங்கு எனது பயிற்சியாளர் கோகுல், என்னை தயார் படுத்தி போட்டிக்கு அனுப்பினர். சென்னையில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றேன். தொடர்ந்து இது போன்று நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளேன். என்ன தான் நான் உடற்பயிற்சி மேற்கொண்டாலும், அப்பாவுக்கு உதவியாக பூண்டு முட்டைகளை லோடு ஏத்தியதின் விளைவாக, எனது கைகள் மிகவும் வலுப்பெற்றிருந்தது. போட்டியில் வெற்றி பெற இதுவும் ஒரு காரணம்," என்றார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe