கோவை மாநகருடன் இணைகிறது கிராம ஊராட்சிகள்...

published 4 months ago

கோவை மாநகருடன் இணைகிறது கிராம ஊராட்சிகள்...

கோவை: கோவை மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகள், பேரூராட்சியை இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து வருவாய் ஈட்டும் பெரிய மாநகராட்சியாக கோவை மாநகராட்சி உள்ளது. 

கோவை மாவட்டம் மொத்தம் 4,723 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில், நகரப்பகுதி மட்டும் 1,519 சதுர கி.மீட்டரை உள்ளடக்கி அமைந்துள்ளது. மாநகரின் எல்லையை விரிவுபடுத்தும் வகையில், நகரை ஒட்டிய மற்றும் மாநகர எல்லைக்குள் வர உகந்த பகுதிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இதனிடையே, தமிழகத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகளுடன் 13 பேரூராட்சிகள் மற்றும் 196 கிராம ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 

புதிதாக உருவாக்கப்பட்ட 4 மா நகராட்சிகளுடன் 2 பேரூராட்சிகள் மற்றும் 46 ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளன.

கோவையைப் பொறுத்தவரை, மாநகராட்சியுடன் ஒரு நகராட்சி, 4 பேரூராட்சிகள், 11 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன.

கோவை செய்திகளை அறிந்துகொள்ள NewsClouds Whatsapp குழுவில் இணையலாம்

கிராம ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்தவுடன், கிராம ஊராட்சிகள் இணைப்புக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியுடன் மதுக்கரை நகராட்சி இருகூர், பேரூர், பள்ளபாளையம், வெள்ளலுார் ஆகிய பேரூராட்சிகள், குருடம்பாளையம், சோமையம்பாளையம், பேரூர் செட்டிபாளையம், கீரணத்தம், நீலாம்பூர், மயிலம்பட்டி, பட்டணம், வெள்ளானைப்பட்டி, கள்ளிப்பாளையம், சின்னியம்பாளையம், சீரப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன.

இந்த இணைப்பின் மூலம் 100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சி, 150 முதல் 200 வார்டுகள் உள்ள மாநகராட்சியாக மாற உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe