கோவையில் நொய்யல் ஆற்றங்கரையில் பனை மரங்கள் வளர்க்கும் திட்டம் துவங்கியது- எதற்காக தெரியுமா?

published 4 months ago

கோவையில் நொய்யல் ஆற்றங்கரையில் பனை மரங்கள் வளர்க்கும் திட்டம் துவங்கியது- எதற்காக தெரியுமா?

கோவை: தமிழ்நாடு முதலமைச்சர்  வழிகாட்டுதலின்படி, நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் பனை விதைகள் பதிக்கும் பணியினை,கோவை மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தனர்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பேரூர் சாலை தெலுங்குபாளையம் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் பனை விதைகள் பதிக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, இயற்கை வளங்களையும் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு பணிகள் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன. அந்த வகையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்படாமல் இருக்க ஆற்று ஓரங்களிலும், குளங்களின் கரையிலும், வாய்க்கால் கரையிலும் குட்டை உள்ள பகுதிகளான காவிரிக் கரைகள் மற்றும் தமிழ்நாட்டின் நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்ட வருகின்றன.

அதன்படி இன்றைய தினம்  கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பேரூர் சாலை தெலுங்கு பாளையம் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் அளவீடு செய்யப்பட்ட இடங்களில் முதற்கட்டமாக சுமார் 1000 பனை விதைகள் பதிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களிலும் பனை விதைகள் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

முன்னதாக, பனை விதைகள் கோயம்புத்தூர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பனை மேம்பாட்டு இயக்கம் 2024-25 மூலமாக பெறப்பட்டது.


இந்நிகழ்வில், தோட்டக்கலை துணை இயக்குனர் சித்தார்த் உதவி இயக்குநர் நந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)மல்லிகா, தன்னார்வலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும்
அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe