ஈஷா யோகா மையத்தில் அதிகாரிகள் ஆய்வு!

published 4 months ago

ஈஷா யோகா மையத்தில் அதிகாரிகள் ஆய்வு!

கோவை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிக்கிணங்க காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் ஈஷா யோகா மையத்தில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

பேராசிரியர் காமராஜின் மகள்கள் ஈஷா யோகா மையத்தில் இருக்கின்ற நிலையில், அவர்களை சந்திக்க ஈஷா அனுமதி மறுப்பதாக தெரிவித்து, ஆட்கொணர்வு மனு போட்டிருந்தார்.

மகள்கள் இருவரும் ஈசா யோகா மையத்தில் துறவியாக மாற்றுவதாகவும் உறவினர்களை சந்திக்க அனுமதி மறுப்பதாகவும் மனதில் குறிப்பிட்டுள்ளார்

ஈஷா யோகா மையத்தில் பல்வேறு குற்ற சம்பவம் நடப்பதாக விமர்சித்த காமராஜர், மருத்துவர் ஒருவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் மற்றும் வழக்கறிஞர் தெரிவித்த அடுத்து நீதிபதிகள் விரிவாக விசாரணை செய்தனர்.

ஈஷா மையத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை , நீதிமன்றத்தில் ஆஜரான இரு பெண்களும் பேசிய விதத்தை பார்க்கும் போது, குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள உண்மை தன்மை தெரிந்து கொள்ள விரிவாக விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈஷா மையத்துக்கு எதிராக பதிவான குற்ற வழக்குகளின் விவரங்கள் , மனுதாரரும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞரும் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கின்றனர்

ஈசா யோகா மையத்துக்கு எதிரான வழக்குகளை கைவிடும் வரை இளைய மகள் லதா சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக  மனுதாரர் காமராஜருக்கு மொபைல் போனின் வாயிலாக மூத்த மகள் கீதா தெரிவித்துள்ளார்

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் ஈசா யோகா மையத்தில் எஸ்.பி கார்த்திகேயன் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe