கோவையில் பட்டாசு உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு...

published 4 months ago

கோவையில் பட்டாசு உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு...

கோவை: 2024-ஆம் ஆண்டில் தீபாவளி பண்டிகை எதிர்வரும் 31.10.2024 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் (மாநகராட்சி பகுதிகளை தவிர்த்து) தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள், வெடிபொருள் சட்டவிதிகள் 2008-ன் கீழ் கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தற்காலிகப் பட்டாசு உரிமம் பெற 07.09.2024 முதல் 06.10.2024-ஆம் தேதிக்குள் இ-சேவைமையங்கள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இந்நிலையில் சென்னை, அரசு முதன்மைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் (மு.கூ.பொ) அவர்களின் செய்தி வெளியீடு எண்:-1585 நாள்:-03.10.2024 அன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வெடிபொருள் சட்டவிதிகள் 2008 விதி எண் 84-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது படி 19.10.2024- (https://www.tneseval.tn.gov.in) என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில (ஊரகப் பகுதிகளுக்கு மட்டும்) தற்காலிக பட்டாசு உரிமம் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க 19.10.2024 வரை கால அளவு நீட்டிக்கப்படுகின்றது. ஏற்கனவே வெளியிடப்பட்ட நாளிதழ் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டும் மற்றும் வெடிபொருள் சட்டவிதிகள் 2008 விதி எண் 84-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மேற்படி தற்காலிக பட்டாசு உரிமம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில் அல்லது நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான உரிமத்தை இணையதளம் வாயிலாக மனுதாரர்கள்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் அனுமதியின்றி /உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது
கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe