கோவையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பிரச்சனை- தீர்மானங்கள் நிறைவேற்றம்...

published 2 weeks ago

கோவையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பிரச்சனை- தீர்மானங்கள் நிறைவேற்றம்...

கோவை: கோவை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிற்சங்க( COITU) தொழிலாளரின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சாய்பாபா கோவில் பகுதியில் நடைபெற்றது.

இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி  108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய வருடாந்திர ஊதிய உயர்வினை அரசாங்கத்தின் முன்னிலையில் முறையாக நடத்தி விரைந்து வழங்கவேண்டும்,

24 மணி நேரமும் முழுமையாக 108 ஆம்புலன்ஸ் சேவையை மக்களுக்கு வழங்கும் வகையில் ஆட்கள் பற்றாக்குறையை சரி செய்வதோடு மேலும் அதிக எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ்களை இயக்க வேண்டும்,
தீபாவளி சிறப்புத்தொகையை (போனஸ்) விரைந்து வழங்க வேண்டும்.

நிர்வாக அதிகாரிகளின் ஒருத்தலைப்பட்ச செயல்பாடுகளை தடுத்து, சேவைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகள் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்,
ஆம்புலன்ஸ்களுக்கு உரிய மருத்துவ உபகரணம் வழங்குவதோடு, தகுதி இல்லாத ஆம்புலன்ஸ்களை சேவையில் இருந்து அகற்றி தரமான புதிய ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாத சூழலில் பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும் திரட்டி தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe