முக்காடுடன் வந்து கூட்டத்தில் பங்கேற்ற கோவை கவுன்சிலர்கள்...

published 2 weeks ago

முக்காடுடன் வந்து கூட்டத்தில் பங்கேற்ற கோவை கவுன்சிலர்கள்...

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் மாதாந்திர மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கோவை திமுக மேயர் மற்றும் அதிகாரிகளை கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் தலையில் முக்காடு அணிந்து கண்டனம் தெரிவித்து கூட்டம் நடக்கும் அரங்குக்குள் வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த மாமன்ற கூட்டத்தில் சொத்துவரி உயர்வு ஒரு சதுர அடிக்கு 82 ரூபாய் வசூல் செய்யும் தீர்மானத்தை கண்டித்து மாமன்ற  கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் சொத்து வரி 6% உயர்வு, தாமதமாக கட்டுபவர்களுக்கு 1% வரி உயர்வு போன்றவை அரசுக்கும் நிர்வாகத்திற்கும் கெட்ட பெயர் ஏற்பட்டு உள்ளது என கவுன்சிலர்கள் தரப்பில் கூறப்பட்டது

மாமன்ற கூட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வரி வசூலிப்பு எப்படி பொதுமக்களிடம் வசூலிக்கலாம் என அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர் பிரபாகரன் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.அதிமுக கவுன்சிலர் கேள்வியால் மேயர் ரங்கநாயகிக்கும் அதிமுக நிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன்,

தமிழ்நாடு மக்கள் தினசரி காலை எழுந்தவுடன் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியை பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது தினம் தினம் இந்த திமுக அரசு ஏதாவது வரியை உயர்த்தி வருகிறார்கள். திராவிட மாடல் குடும்பத்தில் தமிழ்நாடு மக்கள் மாட்டிக்கொண்டு பரிதாபமாக இருக்கிறது வருட வருடம் மாநகராட்சியில் வரியை உயர்த்துகிறார்கள் என்று விமர்சனம் செய்தார்.

மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் அப்போது வரி உயர்வு ஏற்றினால் மக்கள் யாரும் ஓட்டு போட மாட்டார்கள் என்று செப்டம்பர் மாதம் வரிகள் ஏற்றி உள்ளார்கள்.கோவை மாநகராட்சியில் 100 மாமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று நிராகரித்தார்கள் ஆனால் மேயர் அதனை நிறைவேற்றுகிறார்.

அதிமுக ஆட்சி காலத்தில் சதுர அடிக்கு 40 ரூபாய் இருந்த நிலையில் தற்போது சதுர அடிக்கு 88 ரூபாய் வரை உயர்த்தி பொதுமக்களை திமுக அரசு வஞ்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

அரசு அதிகாரிகள் மற்றும் திமுக மேயர் எதையும் கண்டுக்காமல் மக்களிடம் கொள்ளையடித்து வருகிறார்கள்.அதேபோவே குப்பைக்கு 800 ரூபாய் வரி போட்டு உள்ளார்கள்.கோவை மாநகராட்சி வசூல் செய்வதற்கும் கல்லாவை நிரப்ப வேண்டும் எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.

திமுக ஆட்சி மற்றும் கோவை மேயர் வீட்டுக்கு போனால் தான் மக்களுக்கு சுதந்திரமாக ஆட்சியாக இருக்கும் என்றும் 
நீதிமன்றம் முன்வந்து மாநகராட்சியில் நடக்கும் அநியாயத்தை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe