நடிகர் விஜய் மாநாடு- கோவையில் தனது கருத்தை தெரிவித்த ராதிகா சரத்குமார்...

published 1 week ago

நடிகர் விஜய் மாநாடு- கோவையில் தனது கருத்தை தெரிவித்த ராதிகா சரத்குமார்...

கோவை: கோவை மக்கள் சேவை மையம் சார்பில் மோடியின் மகள் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 150 பெண் குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் நிகழ்வு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் வடகோவை குஜராத் சமாஜில் இன்று நடைபெற்றது. 

இந்நிகழ்வில், திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் கொங்குநாடு கலைக் கல்லூரியின் செயலாளர் வாசுகி பரமசிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் குழந்தைகளுக்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நடிகை ராதிகா சரத்குமார், கொங்குநாடு கலைக் கல்லூரியின் செயலாளர் வாசுகி பரமசிவம் ஆகியோர் தீபாவளி பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ராதிகா சரத்குமார் கூறுகையில், பெண்களுக்காக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு தனது பாராட்டுகளை தெரிவிப்பதாக கூறினார்.

டாஸ்மாக் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழக அரசு டாஸ்மாக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இதுகுறித்து மாநில அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு  நிர்ணயித்திருப்பதாக கேள்விப்பட்டதாகவும் அது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் கூறினார்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக மாநாடு குறித்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்தது தனக்கு ஆச்சரியம் அளித்ததாகவும் கூறினார்.

சமத்துவ மக்கள் கட்சிக் கொடியின் வண்ணத்தை போன்றே தமிழக வெற்றிக் கழகக் கொடியின் வண்ணம் இருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மங்களகரமான நிறம் என்று குறிப்பிட்ட அவர், விஜயும் அதே வண்ணத்தை பயன்படுத்தி இருப்பது நல்ல விஷயம் என்றார்.

விஜய் தனது படங்களைப் போன்றே, மாநாட்டையும் "ஒன் மேன் ஷோவாக" காட்டியிருக்கிறார் என்றும் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe