கோவையில் செங்கல் சூளையின் புகை போக்கி கோபுரம் பாதுகாப்பு கருதி இடிக்கப்பட்டது…

published 3 months ago

கோவையில் செங்கல் சூளையின் புகை போக்கி கோபுரம் பாதுகாப்பு கருதி இடிக்கப்பட்டது…

கோவை: கோவை மாவட்டம் தடாகம் பள்ளத் தாக்கில் 200 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இருந்தன.  சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையான அனுமதி பெறாமலும், அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. 

இதனை அடுத்து சமூக ஆர்வலர்கள் தொடுத்த வழக்கின் அடிப்படையில் , சென்னை உயர்நீதிமன்றம்
செங்கல் சூளையின் மின் இணைப்பை துண்டித்து, மூடி சீல் வைக்க உத்திரவிட்டது.  

கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக செங்கல் சூளைகள் இயங்காமல் இருக்கின்றன.

இந்நிலையில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு, செங்கல் சூளையின் புகை போக்கி கோபுரம் கோவை மன்னார்காடு    நெடுஞ்சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த  நெடுஞ்சாலையில் 60 க்கும், மேற்பட்ட கோபுரங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கே.எஸ்.பி செங்கல் சூளைக்கு சொந்தமான புகை போக்கி கோபுரத்தை அதன் உரிமையாளர்கள் பாதுகாப்பு கருதி, கிரேன் உதவியுடன் இடித்தனர்.  இதே போல நெடுஞ்சாலையில், ஆபத்தான முறையில் இருக்கும் புகை போக்கிகளை இடிக்க வேண்டும் என தடாகம். பள்ளத்தாக்கு பாதுகாப்பு  குழுவினர்  கோரிக்கை விடுத்து உள்ளனர்.

செங்கல் சூளை தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe