கோவையில் அர்ஜுன் சம்பத்தை கைது செய்த காவல்துறையினர்...

published 1 day ago

கோவையில் அர்ஜுன் சம்பத்தை கைது செய்த காவல்துறையினர்...

கோவை: ஈஷா யோகா மையம் குறித்தான செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் வார இதழை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக கட்சியின் மாநில இளைஞரணி தலைவரும், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜியை கோவை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்ப்ட்டதை கண்டித்தும் அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகவும் கூறி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்பாட்டம் மேற்கொள்ள இறந்த நிலையில் காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென கட்சி தொண்டர்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து செஞ்சிலுவை சங்கம் நோக்கி 20 க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் பேரணியாக சென்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் பேரணியாக செல்வதற்கும் அனுமதி இல்லை என்று கூறியதை தொடர்ந்து திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டார்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில்  அர்ஜுன் சம்பத் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனால் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe