விலைவாசி உயர்வுக்கு எதிராக கோவையில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்…

published 6 days ago

விலைவாசி உயர்வுக்கு எதிராக கோவையில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்…

கோவை: விலைவாசி உயர்வு, வேலையின்மை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோவை மாவட்டக் குழு சார்பில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய மோடி அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலையின்மை பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒரு லிட்டர் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், மாநில அரசு மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ்,
"ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. 

குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார். "மாநில அரசும் மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாமல், மின் கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை உயர்த்தியுள்ளது. 

இது மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது" என்றும் அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் உள்ளிட்ட பல்வேறு அணிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe