கோவையில் எல்.பி.ஜி கேஸ் லாரி கவிழ்ந்து விபத்து; போலீஸ் கமிஷனர் பேட்டி!

published 2 days ago

கோவையில் எல்.பி.ஜி கேஸ் லாரி கவிழ்ந்து விபத்து; போலீஸ் கமிஷனர் பேட்டி!

கோவை: கோவையில் எல்.பி.ஜி லாரி கவிழ்ந்து கேஸ் வெளியான நிலையில், அது தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காலை  3.15 மணியளவில் கொச்சியில் இருந்து LPG கேஸ் ஏற்றி வந்த டேங்கர்  லாரி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. திருச்சி ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தில் இருந்து மீட்பு வாகனம் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு முன்பாக பம்பு  மூலம் கேஸ்  அகற்றுவதற்கான பணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம். NDRF குழுவினரும் வந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு  கட்டுப்பாட்டில் வைக்கபட்டு மீட்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வேறு பம்பை வைத்து இரண்டு மூன்று டேங்கில் நிரப்ப முயற்சிக்கிறோம். 18 டன் எல்.பி.ஜி கேஸ் இந்த டேங்கர் லாரியில் உள்ளது. தற்காலிகமாக வாயு கசிவு நிறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளன. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பின்னர் பீளமேடு பகுதியில் உள்ள டPG குடோனுக்கு  கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு சரவண சுந்தர் தெரிவித்தார் 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe