93 ஆம்னி பஸ்களுக்கு ரூ.1.85 லட்சம் அபராதம்

published 2 years ago

93 ஆம்னி பஸ்களுக்கு ரூ.1.85 லட்சம் அபராதம்

கோவை, ஆக.19: சுதந்திரத்தினத்தையொட்டி தொடர் விடுமுறையின் போது பயணிகளின் கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. கோவையில் இருந்து நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல ஒரு நபருக்கு ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இதேபோன்று சென்னை செல்லவும் ஒரு நபருக்கு ரூ.2,500 கட்டணமாக பெறப்பட்டது. இந்த கூடுதல் கட்டணம் குறித்த புகாரின் பேரில் கோவை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தினர். இதில் கூடுதல் கட்டணம் வசூலித்த மற்றும் விதிமுறைகளை மீறிய ஆம்னி பஸ்களுக்கு ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வந்த புகார்களை தொடர்ந்து கோவை ஆத்துப்பாலம், சிங்காநல்லூர், நீலம்பூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் கடந்த 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 509 ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 93 ஆம்னி பஸ்கள் விதிமுறைகளை மீறியும், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆம்னி பஸ்களுக்கு ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe