மோசடியில் கைதானவர் மேலும் 100 டின் நெய் வாங்கி ஏமாற்றினார்…

published 1 week ago

மோசடியில் கைதானவர் மேலும் 100 டின் நெய் வாங்கி ஏமாற்றினார்…

கோவை: சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர் தனலட்சுமி(41). மிளகு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் மிளகு வாங்கி ரூ. 14 லட்சம் மோசடி செய்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த கருப்பசாமி(எ)கோபி என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது இதேபோல் கோவை போலீஸ் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

 ரூ. 2 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் மீது மேலும் ஒரு புகார் கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி தக்கலையை சேர்ந்த சுரேஷ்(38) என்பவர் அளித்த புகாரில், நான் நெய் மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். விற்பனையை அதிகரிக்க ஆன்லைனில் விளம்பரம் செய்து வருகிறேன். இதனை பார்த்த கோவையை சேர்ந்த கருப்பசாமி, என்பவர் என்னை தொடர்பு கொண்டு, தான் கோவையில் பிரபல மருத்துவமனை கேண்டீன்களுக்கு நெய், பால், முட்டை விநியோகம் செய்து வருகிறேன். 

எனவே தனக்கு 100 டின் நெய் அனுப்பி வைக்குமாறு தெரிவித்தார். இதனை நம்பி நானும் அவர் கோவையில் சொன்ன முகவரிக்கு ரூ. 3.37 லட்சம் மதிப்பில் நெய் அனுப்பி வைத்தேன். அதற்குண்டான தொகையை கருப்பசாமி காசோலையாக கொடுத்தார். அதனை வங்கியில் செலுத்தியபோது அது பணம் இல்லாமல் திரும்பியது. மீண்டும் கருப்பசாமியை தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை. 

அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை வாங்கி தருமாறு தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் கருப்பசாமி, மோசடிக்கு உடந்தையாக இருந்த தேவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe