கோவையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு- சிசிடிவி காட்சிகள் உள்ளே…

published 1 day ago

கோவையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு- சிசிடிவி காட்சிகள் உள்ளே…

கோவை: கோவை, வடவள்ளி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், கலைவாணி தம்பதியினர். கலைவாணி அருகே உள்ள ஆரம்பப் பள்ளியில் ஆசிரியைராக பணியாற்றி வருகிறார். 

இன்று காலை பள்ளிக்குச் சென்ற இருந்த நிலையில், பிற்பகலில் அவரது கணவர் ரமேஷ் மனைவியை பார்க்க வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள பள்ளிக்குச் சென்றார். திரும்பி வந்து கொண்டு இருந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வெளியே மர்ம நபர் ஒருவரும் இவரைப் பார்த்து அங்கு இருந்து தப்பிச் சென்று உள்ளார். 

ரமேஷ் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்றார். அப்போது உள்ளே இருந்த வந்த மற்றொரு மர்ம நபர் ரமேஷை தள்ளி விட்டு ஓடினார். ரமேஷ் திருடன், திருடன் என சத்தம் போட்டுக் கொண்டு பின் தொடர்ந்து ஓடினார்.

இதை அடுத்து அருகில் உள்ள அடுத்த வீதிக்கு இருசக்கர வாகனத்துடன் காத்து இருந்த அந்த மர்ம நபர் நகைகளை திருடி வந்த அந்தத் திருடனை இருசக்கர வாகனத்தில் ஏற்றுக் கொண்டு கண் இமைக்கும் நேரத்திற்குள் அங்கு இருந்து இருவரும் தப்பிச் சென்றனர்.

இது குறித்து ரமேஷ் வடவள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்பொழுது வீட்டில் பீரோவில் வைத்து இருந்த ரூபாய் ஒன்றரை லட்சம் மற்றும் 58 பவுன் நகை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து வழக்கு பதிவு செய்து, இருசக்கர வாகனத்தில் தப்பிய மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அப்பகுதியின் பொது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtube.com/shorts/H7WeS_u6tck?feature=share

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe