ராமநாதபுரம் போலீசார் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி தன்னை திட்டுவதாகவும் மிரட்டுவதாகவும் புகார்...

published 10 hours ago

ராமநாதபுரம் போலீசார் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி தன்னை திட்டுவதாகவும் மிரட்டுவதாகவும் புகார்...

கோவை: கோவை மாநகர் ராமநாதபுரம், கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் பாபு(32). இவர் அதே பகுதியில் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மனைவி இறந்துவிட்டார். பாபு மீது சரவணம்பட்டி, சிங்காநல்லூர் ஆகிய காவல் நிலையங்களில் பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் இவர் மாதம் இரண்டு அல்லது மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.

இந்நிலையில் ராமநாதபுரம் காவல் துறையினர் தன்னை செல்போனில் தொடர்பு கொண்டு காவல் நிலையம் வருமாறு தொடர்ந்து அழைப்பதாகவும்,  செய்யாத குற்றத்தில் குற்றவாளியாக சிக்க வைப்பதற்கு திட்டம் தீட்டுகிறார்களோ என சந்தேகம் எழுவதாகவும் அதுமட்டுமின்றி இராமநாதபுரம் காவலர்கள் தன்னை கொச்சை வார்த்தைகளால் செல்போனில் திட்டுவதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தன்னை செல்போனில் தொடர்பு கொண்ட தலைமை காவலர் பெயர் கூறவில்லை எனவும் மிகவும் கொச்சையான வார்த்தைமகளால் தன்னை மிரட்டுவதாக தெரிவித்த அவர் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினரை தொடர்பு கொண்டு கேட்ட போது குற்றவாளிகள் மீண்டும் ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு பிணை பாத்திரம் எழுதி கையெழுத்து வாங்குவது வழக்கம் அதற்காக தான் பாபுவையும் அழைத்தோம். பாபுவை அழைத்தது  தலைமை காவலர் சுரேஷ்பாண்டி என்பவர். சுரேஷ்பாண்டி அவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளதாக கூறப்படும் நிலையில் அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe