சட்டமன்றத் தேர்தலுக்குள் கோவை மாவட்டம் திமுகவின் எஃகு கோட்டையாக மாற வேண்டும்- அமைச்சர் செந்தில்பாலாஜி...

published 1 week ago

சட்டமன்றத் தேர்தலுக்குள் கோவை மாவட்டம் திமுகவின் எஃகு கோட்டையாக மாற வேண்டும்- அமைச்சர் செந்தில்பாலாஜி...

கோவை: திமுக சட்டத்துறை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் காளப்பட்டி பகுதயில், தனியார் ஹாலில் நடைபெற்றது.

 

இதில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் கேஎம்.தண்டபாணி வரவேற்புரையாற்ற,   திமுக சட்டத்துறை மூத்த வழக்கறிஞர் என்ஆர்.இளங்கோ தலைமை ஏற்க, தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மறைந்த மூத்த வழக்கறிஞர் AK.ராஜேந்திரன் திருவுருவ படத்தை  திறந்து வைத்து 
தலைமை உரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் ;-

உள்ளாட்சி தேர்தலில் ஆரம்ப கட்டம் முதல், தேர்தல் முடியும் வரை இரவு பகல் பாராமல் உழைத்த சட்டத்துறையினருக்கும், அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நன்றி. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஆரம்பத்திலிருந்தே அனைத்து பணிகளையும் பார்ப்பது வழக்கறிஞர்களே, அப்போது ஏற்படும் பிரச்சினைகள் என்றாலும் சரி, வாக்குசேகரிக்கும் போதும் என்றாலும் சரி, வாக்குசான்றை கையில் பெறும் வரை வழக்கறிஞர்களின் பணி சிறப்பானது. 

அதேபோல், 2026 ல் கோவையின் 10 தொகுதிகள், தமிழகம் முழுவதும் 200 தொகுதிகளையும்  வெற்றெடுப்போம்,  என்ற பெருமையனை அடைய வேண்டும். அந்த வெற்றி பயணத்தை துவங்க வேண்டும்.

மறைந்த ஏகே ராஜேந்திரன் ஆற்றிய பணிகளை புகழாரம் சூட்டியவர், அவருக்கு வீர வணக்கத்தை செலுத்துவதாக தெரிவித்தார். மாவட்ட கழகம் சார்பில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் 80 சதவீத வழக்குகள் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள வழக்குகள் விரைவில் முடிக்கப்படும் என கூறினார்.

வரும் சட்டமன்ற தேர்தல் திமுகவின் எஃகு கோட்டையாக கோவை மாற வேண்டும் அந்த அளவில் நமது பணிகள் சிறப்பாக இருக்க வேண்டும். இங்கு இருக்க கூடி வழக்கறிஞர்களுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் சேர்ந்து இங்கு உள்ள 10 சட்டமன்றங்களை வென்றெடுப்போம் என்ற உறுதியை கூறிக்கொள்கிறேன் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe