கோவை நீதிமன்ற வளாகம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு- காரணம் இது தான்...

published 14 hours ago

கோவை நீதிமன்ற வளாகம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு- காரணம் இது தான்...

கோவை: நெல்லை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்தின் எதிரொலி கோவை நீதிமன்றத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு நெல்லையில் நீதிமன்ற வளாகத்தில் வெற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்றத்திற்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறி வழக்கை விசாரணை கிடைத்தது அதனை தொடர்ந்து தமிழக டிஜிபி மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அறிவிப்பை வெளியிட்டார்

அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் துப்பாக்கி எழுதிய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இன்று முதல் ஈடுபடுத்தப்பட உள்ளனர் இந்த நிலையில் கோவையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் மொத்தமுள்ள நான்கு நுழைவு வாயில்களிலும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், நீதிமன்றத்திற்கு உள்ளே வரும் நபர்கள் மற்றும் வெளியே செல்லும் நபர்கள் என அனைவரும் பாதுகாப்பு சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe