நோவிஸ் கோப்பை கார் பந்தயம்-லிரோன் ஜேடன் வெற்றி…

published 12 hours ago

நோவிஸ் கோப்பை கார் பந்தயம்-லிரோன் ஜேடன் வெற்றி…

கோவை: கோவை கரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடந்த ஜேகே டயர் நோவிஸ் கோப்பை கார் பந்தயத்தில் 5 போட்டிகளில் மொத்தம் 37 புள்ளிகள் எடுத்து டிடிஎஸ் ரேசிங் அணியை சேர்ந்த லிரோன் ஜேடன் சாமுவேல் முதலிடம் பிடித்தார். 

மேலும், அணியை பொறுத்தவரை மொமண்டம் மோட்டார் ஸ்போர்ட் அணி 63 புள்ளிகளை பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இந்த அணியை சேர்ந்த ஆதித்யா பட்நாயக் 31 புள்ளிகளை எடுத்தார். லிரோன் மற்றும் ஆதித்யா பட்நாயக் இருவரும் ஒரே நாளில் சாதனை படைத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர். 

அதேபோல் எம்ஸ்போர்ட் அணியின் பெங்களூரைச் சேர்ந்த 16 வயது அபய் 3 போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். நேற்று முன்தினம் நடைபெற்ற 5 போட்டிகளில் 3வது போட்டியில் முதலிடம் பிடித்தார். 20-ம் தேதி நடைபெற்ற போட்டியில் திருநெல்வேலியைச் சேர்ந்த லிரோன் மற்றும் அவரது டிடிஎஸ் ரேசிங் அணி வீரர் பொள்ளாச்சியைச் சேர்ந்த லோகித் எல்.ரவி முதல் பந்தயத்தில் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். 

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் லிரோன் முதல் மற்றும் நான்காவது போட்டியில் முதலிடம் பிடித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe