கோவையில் 5வது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி- மீண்டும் கொண்டுவரப்பட்ட DJ நிகழ்வால் பொதுமக்கள் மகிழ்ச்சி...

published 1 week ago

கோவையில் 5வது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி- மீண்டும் கொண்டுவரப்பட்ட DJ நிகழ்வால் பொதுமக்கள் மகிழ்ச்சி...

கோவை: கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நான்கு வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று ஐந்தாவது வாரமான நடைபெற்றது. 

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆடல் பாடல் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த இரண்டு வாரங்களாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்வில் டிஜே நிகழ்ச்சியில் இல்லாத நிலையில் பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் டிஜே கொண்டுவரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆடிபாடி மகிழ்ந்தனர்.

மேலும் இன்றய நிகழ்ச்சியில் தமிழ் என்ற இளைஞர் மார்டன் HIPHOP யில் சங்க தமிழர்களின் வரலாற்றை  பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
தொடர்ந்து அடுத்த வாரம் கொடிசியா பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe