பொங்கல் பண்டிகை- கோவையில் அதிக வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் செய்ய எண் அறிவிப்பு...

published 20 hours ago

பொங்கல் பண்டிகை- கோவையில் அதிக வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் செய்ய எண் அறிவிப்பு...

கோவை: பொங்கல் தொடர் விடுமுறை அடுத்து பண்டிகை காலங்களில் சொந்தவர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் செல்லும் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் மற்றும் பிற குறைபாடுகள் காரணமாக பல இடையூறுகளை சந்தித்து வருகிறார்கள். இதனை தடுக்கும் வகையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் போக்குவரத்து காவல் துறையினருடன் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் அவரைத் தொடர்ந்து விழாக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் நிலையான கட்டணம் குறித்து பேசி முடிவெடுக்கப்பட்டு உள்ளது மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் ஏதும் வராத வண்ணம் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பும் வெளியிட்டு உள்ளார் மேலும் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளின் முறையற்ற கட்டண இயக்கம் சம்பந்தமாக கூடுதல் கட்டணம் சம்பந்தமாகவும் புகார் அளிக்க 9384808304 என்ற தொலைபேசி என்னில் நேரடியாக தொடர்பு கொண்டால் அல்லது whatsapp மூலமாகவோ புகார் அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது, மேலும் புகார் அளிக்கும் பொதுமக்கள் அவர்களுடைய பெயர் தொலைபேசி எண் பயணம் செய்யும் தேதி செல்லும் இடம் டிக்கெட்டின் புகைப்படம் கட்டண விவரம் பேருந்து எண் மற்றும் பெயர் ஆகியவற்றுடன் முறையாக புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe