காவல் துறையினருடன் கிரிக்கெட் விளையாட ஆசையா கோவை மக்களே..?

published 2 years ago

காவல் துறையினருடன் கிரிக்கெட் விளையாட ஆசையா கோவை மக்களே..?

 

கோவை: வருகின்ற 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கோவையில் காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

இது குறித்து காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
"காவல் துறையினர் மற்றும் பொதுமக்களிடையே இணக்கமான சூழலை உருவாக்கும் முயற்சியில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தி, போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். மேலும் இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முயற்சியாக நடைபெற உள்ளது." என்றார்.

இந்த போட்டியில் காவல் துறை சார்பில் 10 அணிகளும் பொதுமக்கள் சார்பில் 64 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. முதல் கட்டமாக காவல் துறை அணியினர் தனியாகவும், பொதுமக்கள் அணியினர் தனியாகவும் போட்டியிடுவர். இந்த போட்டிகள் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கோவை அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும். போட்டிகளில் பங்கேற்பதுடன் பொது மக்கள் இந்த போட்டிகளைக் காணவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையினருக்கான போட்டியில்  வெற்றிபெரும் அணியும் பொதுமக்களுக்கான போட்டியில்  வெற்றிபெரும் அணியும் அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் மோதுவர். இந்த போட்டி பி.எஸ்.ஜி இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் மைதானத்தில் நடைபெறும். வெற்றிபெரும் அணிகளுக்கு ரூ. 25 ஆயிரத்திற்கான பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.  

காவல் துறையின் இந்த முயற்சிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆதரவு அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியை நமது YouTube சேனலில் காணலாம்:

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe