ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

published 2 years ago

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த ஒரு பெண். இவருக்கும் பொள்ளாச்சி கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆனது.

இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு விவாகரத்து ஆகியுள்ளது. விவாகரத்து ஆன நிலையில் முன்னாள் கணவர் அவரை அடிக்கடி நேரில் சென்று வாழவிடாமல் டார்ச்சர் செய்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் அந்த பெண் வேலைக்கு சென்றாலும் வேலைக்கு செல்லும் இடத்தில் அவரை குறித்து தவறாக பேசியும், அவரது புகைப்படத்தை தவரான முறையில் அபாசமாக சித்தரித்து முன்னாள் கணவரும், கணவரது உறவினர்களும் வலைதளத்தில்  பதிவிடுவதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து மன விரக்தி அடைந்த அந்த பெண் கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது பணியில் இருந்த காவலர்கள் அவருடைய கையில் இருந்த கேன்னை பிடுங்கி அவரை காப்பாற்றினார்கள். பின்னர் காவல் துறையினர் சமரசம் பேசி அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் கொடுக்க அறிவுறுத்தினர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe