கோவையில் காதலியை கத்தியைக் காட்டி மிரட்டிய காதலன்: வழக்குப் பதிவு

published 2 years ago

கோவையில் காதலியை கத்தியைக் காட்டி மிரட்டிய காதலன்: வழக்குப் பதிவு

கோவை: கோவையில் தன்னுடன் பேச மறுத்த காதலியைக் கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்த வாலிபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் சூலூரில் உள்ள தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக அருண்(27) என்ற வாலிபரைக் காதலித்து வந்தார்.

இதற்கிடையே குடிப்பழக்கத்துக்கு அடிமையான அருண் அடிக்கடி மாணவியிடம் பிரச்சினை செய்து வந்தார். இதனால் அவரது நடவடிக்கை பிடிக்காததால் அருணை விட்டு விலகிச் செல்ல மாணவி முயன்றார். பேசுவதையும் தவிர்த்து வந்தார்.

ஆனால் அருண் மாணவியைப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை மாணவி கல்லூரி முடிந்து தனது தோழிகளுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அவர்கள் கணபதி-சத்தி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த அருண், மாணவியைத் தகாத வார்த்தைகளால் திட்டி தன்னிடம் மீண்டும் பேச வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் அருண் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் பார்க்கலாமே..

கோவையில் தீபாவளி அதிரடி சலுகையாக ரூ.16000 மதிப்புள்ள மொபைல் ரூ.2800 மட்டுமே...: https://youtu.be/vYjLHpSsQ6E

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe