கோவையில் சிறப்பு திருப்பலியுடன் ஈஸ்டர் பண்டிகை இன்று கோலாகலக் கொண்டாட்டம்

published 1 year ago

கோவையில் சிறப்பு திருப்பலியுடன் ஈஸ்டர் பண்டிகை இன்று கோலாகலக் கொண்டாட்டம்

கோவை: கோவையில் உள்ள பல தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலியுடன் ஈஸ்டர் பண்டிகை வெகு சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது.

கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த கடந்த பிப்ரவரி மாதம் துவங்கி 40 நாட்கள் அனுசரிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து புனித வெள்ளியன்று மரித்து மூன்றாவது நாளான ஞயிற்றுக்கிழமை உயிர்த்தெழும் நாளை கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். 

இதனையொட்டி கோவையில் பல பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு நடு இரவு திருப்பலி நடத்தப்பட்டது. 

இதில் ஒரு பகுதியாக கோவை காந்திபுரத்தில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் டேவிட் பர்ணாபாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அப்போது இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது. 

இதேபோல், திருச்சி ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயத்தில் தலைவர் ராஜேந்திர குமார், செயலாளர் பாக்கிய செல்வன், பொருளாளர் காட்வின் கோயில் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் தங்களது ஈஸ்டர் பண்டிகைத் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe