கோவை மருதமலை முருகன் கோவிலில் லிப்ட் அமைக்கும் பணி தொடங்கியது..!

published 1 year ago

கோவை மருதமலை முருகன் கோவிலில் லிப்ட் அமைக்கும் பணி தொடங்கியது..!

கோவை :முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

மலை மீதுள்ள இந்த கோவிலுக்கு, 'பார்க்கிங்' வரை வாகனங்களில் செல்லலாம். அதன்பிறகு படிக்கட்டுகள் வழியாக ஏறிச் சென்று தான் சுவாமி தரிசனம் செய்ய முடியும். இங்கு வரும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டில் ஏறுவதற்கு சிரமமாக உள்ளது. 

இதனால், 'லிப்ட்' அல்லது நகரும் படிக்கட்டுகள் அமைக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 2021-ல், மருதமலையில் 'லிப்ட்' அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது. 

ஆட்சி மாற்றத்துக்கு பின், திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம், ரூ.5.20 கோடி மதிப்பில், 'லிப்ட்' அமைக்கும் பணியை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து லிப்ட் அமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டு உள்ளது.

 2024 ஜூன் மாதத்துக்குள் பணியை முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹர்ஷினி கூறுகையில். "மருதமலையில் ராஜகோபுரம் அருகில் 'லிப்ட்' அமைக்கப்படுகிறது. 

பாறைகள் உள்ளதால், 'கெமிக்கல்' செலுத்தி வெட்டி எடுக்கப்படுகின்றன. பணிகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுகின்றன," என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe