உஷார்.. கோவையில் வங்கி கடன் பெற்று தருவதாக ரூ.8.8 லட்சம் மோசடி..!

published 1 year ago

உஷார்.. கோவையில் வங்கி கடன் பெற்று தருவதாக ரூ.8.8 லட்சம் மோசடி..!

கோவை:

கோவையில் வங்கி கடன் பெற்று தருவதாக மருந்து கடை உரிமையாளரிடம் ரூ. 8.88 லட்சம் மோசடி செய்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்தவர் ஜெய்சன் தாமஸ்(47). மருந்து கடை உரிமையாளர். இவர் தனது தொழிலை விரிவு படுத்த வங்கி கடன் பெற முயற்சி செய்து வந்தார். அப்போது அவருக்கு கோவையை சேர்ந்த விஜயகுமார், வீரவிஜயன் ஆகியோர் அறிமுகமாகினர். 

அப்போது இருவரும் ஒன்றிய அரசு பெயரில் போலியான திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் ரூ. பல கோடி கடன் வாங்கி தருவதாக ஜெய்சன் தாமசிடம் கூறியதாக தெரிகிறது. மேலும் கடன் வாங்கி தர ரூ. 15 லட்சம் முன்பணத்தை கமிஷன் தொகையாக தர வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

இதனை உண்மை என நம்பிய ஜெய்சன் தாமஸ் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரேஸ்கோர்சில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வைத்து ரூ. 15 லட்சத்தை விஜயகுமார் மற்றும் வீரவிஜயனிடம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் இருவரும் சொன்னபடி வங்கி கடன் பெற்று தரவில்லை. இது குறித்து கேட்டபோது மழுப்பலான பதிலை தெரிவித்துள்ளனர். 

பின்னர் சிறிது, சிறிதாக அவர்களிடம் இருந்து ஜெய்சன் தாமஸ் பணத்தை திரும்ப வாங்கினார். ஆனால் தான் வாங்கியது போக மீதமுள்ள 8,88,221 ரூபாயை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். 

இதனால் ஏமாற்றமடைந்த ஜெய்சன் தாமஸ் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe