12 ராசிகளுக்குமான இன்றைய (10ம் தேதி ) ராசிபலன்
மேஷம்
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செலவுகளை குறைப்பதற்கான சூழல் அமையும். கடன் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.
பரணி : பேச்சுவார்த்தைகள் ஈடேறும்.
கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தெளிவான சில முடிவுகளால் மாற்றம் உண்டாகும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். தனித்து செயல்படுவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
கிருத்திகை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ரோகிணி : அனுகூலம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
மிதுனம்
வியாபாரத்தில் நயமான பேச்சுக்களால் நன்மை உண்டாகும். நினைத்த சில பணிகளில் போராட்டங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : நன்மை உண்டாகும்.
திருவாதிரை : நெருக்கடியான நாள்.
புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
---------------------------------------
கடகம்
வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : அபிவிருத்தியான நாள்.
பூசம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
ஆயில்யம் : செல்வாக்கு உயரும்.
---------------------------------------
சிம்மம்
வியாபாரத்தில் லாபம் மேம்படும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு உண்டாகும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் திருப்தியான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : லாபம் மேம்படும்.
பூரம் : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திரம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.
---------------------------------------
கன்னி
எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவல் பணிகளில் துரிதம் ஏற்படும். மனதளவில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். புதியவர்களின் நட்பால் உற்சாகம் உண்டாகும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தடைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : சிந்தனைகள் உண்டாகும்.
சித்திரை : உற்சாகமான நாள்.
---------------------------------------
துலாம்
அரசு பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். பல பணிகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். மறைமுகமான சில விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். செய்தொழிலில் விவேகம் வேண்டும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். ஊக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும்.
சுவாதி : விமர்சனங்கள் நீங்கும்.
விசாகம் : வரவுகள் கிடைக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மனநிலையில் இருந்துவந்த குழப்பம் விலகும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
விசாகம் : ஆதரவான நாள்.
அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கேட்டை : குழப்பம் விலகும்.
---------------------------------------
தனுசு
தந்திரமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களால் லாபம் ஏற்படும். திடீர் வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். எதிர்ப்புகளின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மூலம் : முக்கியத்துவம் அதிகரிக்கும்.
பூராடம் : மாற்றம் உண்டாகும்.
உத்திராடம் : விட்டுக்கொடுத்துச் செயல்படவும்.
---------------------------------------
மகரம்
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். நிர்வாக துறைகளில் மதிப்பு மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும்.
அவிட்டம் : தேவைகள் நிறைவேறும்.
---------------------------------------
கும்பம்
கடன் சார்ந்த சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவு பெறும். விருப்பமானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். தாயுடன் அனுசரித்துச் செல்லவும். குழந்தைகளை பற்றிய புரிதல் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : அனுகூலமான நாள்.
சதயம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். பூர்வீகம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் உண்டாகும். கனிவான செயல்பாடுகளால் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாளுவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். காது தொடர்பான இன்னல்கள் குறையும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : ஒத்துழைப்பு ஏற்படும்.
உத்திரட்டாதி : மதிப்பு அதிகரிக்கும்.
ரேவதி : இன்னல்கள் குறையும்.
---------------------------------------