ஆவின் பால் ஊதா நிறத்திற்கு மாறுகிறது - கோவை மாவட்ட ஆட்சியர்

published 1 year ago

ஆவின் பால் ஊதா நிறத்திற்கு மாறுகிறது - கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை: பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் ஊதா நிறத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் கடந்த 01.02.2023 தேதி முதல் நாளது தேதி வரை ஆவின் பசும்பால் COW MILK (3.5 FAT - 8.5 SNF) என்ற பெயரில் 250ml, 500 ml ஆகிய அளவுகளை கொண்ட பால் பாக்கெட்டுகள் பச்சை நிற வண்ணத்தில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வரும் 6ம் தேதி முதல் அனைத்து மாவட்ட ஒன்றியங்களிலும் ஒரே வண்ண பாக்கெட்டுகளை அறிமுகம் செய்யும் வகையில், ஆவின் COW MILK (3.5FAT - 8.5 SNF) என்ற பெயருக்கு பதிலாக ஆவின் டிலைட் (Aavin delight) (3.5FAT-8.5 SNF) என்ற பெயரில் ஊதா நிற (purple) பால் பாக்கெட்டுகளில் விநியோகம் செய்யப்படவுள்ளது.

மேலும் பாலின் கொழுப்பு மற்றும் இதர சத்துகளில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆதலால், இந்த ஆவின் டிலைட் (Aavin delight-3.5% FAT-8.5% SNF) ஊதா நிற (purple) ஆவின் பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் வாங்கி பயனடையலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe