மண்ணை தின்று வாழ்ந்த மூதாட்டி மீட்கபட்டு மருத்துவமனையில் அனுமதி

published 2 years ago

மண்ணை தின்று வாழ்ந்த மூதாட்டி மீட்கபட்டு மருத்துவமனையில் அனுமதி

வீட்டில் அடைத்து வைக்கபட்டதாக கூறப்படும் மூதாட்டி மண்ணை தின்ற சோகம்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரை சேர்ந்த 70 வயது மூதாடி ஜானஜோதி.சொத்து பிரச்சனை காரணமாக மூதாட்டியை அவரது இரண்டு மகன்களும் ஒரு வீட்டில் பூட்டி வைத்ததாகக் கூறப்படுகிறது.

போதுமான உணவு,தண்ணீர் வழங்கப்படாததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமடைந்த மூதாட்டி ஞானஜோதி அடைத்து வைக்கபட்ட வீட்டுக்குள் தரையிலுள்ள மண்ணை தின்று வந்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியருக்கு தகவல் கிடைத்ததையடுத்து மூதாட்டி மீட்கப்பட்டு, தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஞானஜோதியை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் நேற்று சந்தித்து பழங்களை வழங்கி ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.

 பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறிகையில் ஞானஜோதியின் உடல்நிலை சரியான பிறகு தங்ககளிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவரை மாநகராட்சிக்கு சொந்தமான முதியோர் இல்லத்தில் வைத்து இறுதிநாள் வரை பத்திரமாக பராமரிப்போம் என்ற உத்தரவாதத்தை அளித்துள்ளதாகவும்  என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe