மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நிதி திரட்ட மாரத்தான் மற்றும் சைக்கிளிங் போட்டி...

published 1 year ago

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நிதி திரட்ட மாரத்தான் மற்றும் சைக்கிளிங் போட்டி...

கோவை: கோவையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நிதி திரட்டு வகையில் மாரத்தான் மற்றும் சைக்கிளிங் போட்டி நடைபெற்றது.

நாம் நடந்து மற்றவர்களையும் நடக்க வைப்போம் என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான செயற்கை கால் வழங்க நிதி திரட்டும் வகையில் ரோடோ ரைட் ஆர் ரன் எனும் மாரத்தான்,வாக்கதான் மற்றும் சைக்கிளிங் போட்டி நடைபெற்றது.

ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் டவுன்டவுன் மற்றும் செக்புரோ சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோவை அவிநாசி சாலையில் துவங்கப்பட்ட இந்த போட்டியானது 5 கிலோ மீட்டர்,10கிலோ மீட்டர்,15 கிலோ மீட்டர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது.இதில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe