முதலமைச்சர் வருகையையொட்டி முன்னேற்பாட்டு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் முத்துச்சாமி...

published 1 year ago

முதலமைச்சர் வருகையையொட்டி முன்னேற்பாட்டு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் முத்துச்சாமி...

கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 18ம் தேதி கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை புரிய உள்ளார். 18ம் தேதி கோவைக்கு வரும் முதலமைச்சர் நவ இந்தியா பகுதியில் உள்ள SNR கலையரங்கில் நடைபெறும் மக்களுடன் முதல்வன் திட்ட துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் கலையரங்கை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் முத்துச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி 18ம் தேதி மக்களுடன் முதல்வன் என்ற திட்டம் துவங்கப்பட உள்ளதாகவும், இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 இடங்களில் 17 நாட்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படும். கோவையில் நடைபெறும் நிகழ்வில் பொதுமக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் உணவு ஏற்பாடுகளும் செய்யப்படும். அதனை தொடர்ந்து செம்மொழி பூங்கா அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வில் முதல்வர் கலந்து கொள்கிறார். அதே இடத்துல் சுமார் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது என்றார். செம்மொழி பூங்காவை கட்டமைக்கும் போது மக்களின் எண்ணம் தேவைகள் எப்படி இருக்கும் என தெரிந்துவிடும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe