திருமண மண்டபத்தில் நகைகளை திருடிய நபர் கைது- சிசிடிவி காட்சிகள்...

published 1 year ago

திருமண மண்டபத்தில் நகைகளை திருடிய நபர் கைது- சிசிடிவி காட்சிகள்...

கோவை: கோவை சிங்காநல்லூர் அருகில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் மர்ம நபர் தங்க நகையை திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கடந்த மாதம் 8 ஆம் தேதி கோவை திருச்சி சாலை சிங்காநல்லூர் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மர்ம நபர் ஒருவர்  5 சவரன் நகைகளை திருடியதாக திருமண வீட்டார் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் வழக்கு பதிவு செய்த போலிசார் திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி  கேமரா காட்சிகளை பார்க்கும் போது அதில் ஒருவர் நகைகளை திருடி சென்றது பதிவாகி இருந்தது.  அந்த காட்சிகளை கைப்பற்றிய போலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் விதமாக நின்று கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் தான் திருமண மண்டபத்தில் நகை திருட்டில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது.

மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா (எ) மணி என்பதும் கோவை பீளமேடு பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்து உள்ளது.

மேலும் அந்த நகைகளை அடகு வைப்பதற்க்காக வைத்து இருந்த நிலையில்  நகைகளை பறிமுதல் செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

தற்போது திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/465Hn4hIa7M?si=G3-UD5L5zy9H_T55

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe