பூமியை தூய்மையாக்குங்கள்- கோவை கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு...

published 1 year ago

பூமியை தூய்மையாக்குங்கள்- கோவை கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு...

கோவை: பூமியை தூய்மையாகவும், பசுமையாகவும் வைக்க கோரி கோவை ரயில் நிலையத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

நிலத்தில் பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களை குப்பைகளாக போடுவதால் நிலம் மாசடைந்து ஆபத்தான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பலரும் எச்சரித்து வருகின்றனர். இதனால் பூமியை பாதுகாக்கவும் பசுமையாக வைத்துக் கொள்ளவும் பல்வேறு அமைப்புகள் தன்னார்வலர்கள் முன்வந்து பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மத்திய ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா தனியார் கல்லூரி சார்பில் பூமியை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் பசுமையாக வைத்துக் கொள்ளவும் வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்கள் பூமியை தூய்மையாக வைத்துக் கொள்வதை வலியுறுத்தி விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர். மேலும் ரயில் நிலையத்தில் வரிசையாக நின்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சில மாணவர்கள் முகத்தில் ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வு வாசகங்களை எழுதியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe