கோவையில் ஜாதி பெயரில் பலகை; எதிர்ப்பும் தி.மு.க., மீட்டதும் தி.மு.க.!

published 11 months ago

கோவையில் ஜாதி பெயரில் பலகை; எதிர்ப்பும் தி.மு.க., மீட்டதும் தி.மு.க.!

கோவை: கோவையில் ஜாதி அடையாளத்துடன் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் ஜாதி பெயர் இருந்ததால் அதனை தி.மு.க., பிரமுகர் கருப்பு மையால் அழித்தார். இதனை கம்மவார் நாயுடு எழுச்சி பேரவை நிர்வாகிகள் தி.மு.க., ஆதரவோடு மீட்டனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஜி.டி., என்ற பெயரில் வீதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் புதிதாக பெயர் பலகை வைத்த கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர், அதில் ஜி.டி., நாயுடு சாலை என குறிப்பிட்டு இருந்தனர்.  

இந்நிலையில் அதே பகுதியில் இருந்து வரும் ரேஸ்கோர்ஸ் ரகுநாதன் என்ற தி.மு.க., பிரமுகர் நாயுடு என்ற சாதி பெயருடன் பெயர் பலகை வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த சாதி பெயரை கருப்பு மையால் அழித்தார்.

தமிழகம் முழுவதும் ஊர் மற்றும் வீதிகளில் ஜாதி பெயரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், சாதி பெயருடன் கூடிய பெயர் பலகை வைக்கப்பட்டதால் அதை  அழித்ததாக தி.மு.க., பிரமுகரும், சினிமா தயாரிப்பாளருமான ரேஸ்கோர்ஸ் ரகுநாத் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த செயல் ஜி.டி.நாயுடு பெயரை அவமதிக்கும் செயல் என்று கூறி கம்மவார் நாயுடு எழுச்சி பேரவை நிர்வாகிகள் தி.மு.க.,  ஆதரவோடு அதே இடத்தில் மீண்டும் பழைய பெயர் பலகையை வைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe