கோவையில் வணிகர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்...

published 1 week ago

கோவையில் வணிகர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்...

கோவை: வணிக கட்டிட வாடகை மீதான 18% ஜி.எஸ்.டி வரி, ஆண்டுக்கு 6% சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும் அவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் அவர்களது கோரிக்கைகளை பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கூறுகையில், அரசின் கருவூலமாக இருக்கும் வணிகர்கள் மீது வரிமேல் வரி, சட்டத்தின் மேல் சட்டங்கள், வணிக விரோத கோட்பாடுகள் என மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையின் வெளிப்பாடாகவே இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகக் கூறினர்.

வணிகர்களை குறி வைத்தே வணிக கட்டிட வாடகை மீது 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது என்றும் மாநில அரசு 2 ஆண்டுகளுக்கு முன் பன்மடங்கு சொத்துவரி உயர்வை அமல்படுத்தி மீண்டும் ஆண்டுக்கு 6% சொத்து வரி உயர்வு என அறிவித்திருப்பது வணிகர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் செயல் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe