இருகூரில் குடிபோதையில் கல்லை கொண்டு 23வயது இளைஞரை கொலை செய்த 40 வயது நபர்...

published 2 days ago

இருகூரில் குடிபோதையில் கல்லை கொண்டு 23வயது இளைஞரை கொலை செய்த 40 வயது நபர்...

கோவை: கோவை இருகூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார், இவரது மகன் 23 வயதான சோம்நாத். இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் அவ்வப்போது தனியார் பேருந்தில் நடத்துனருக்கு உதவியாளராக சென்று வருவதாக கூறப்படுகிறது. இவர் அதே பகுதியில் குடும்பத்துடன் இல்லாமல் தனி வீட்டில்  வசித்து வருகிறார். 

இவருடன் 40 வயது மதிக்கத்தக்க மதன் என்பவரும் தங்கி உள்ளார். மதன் இருகூர் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள காவல் தெய்வம் கோவில் ஒன்றில் அடிக்கடி பூஜை செய்து வருபவர் எனவும் மாந்திரீகம் உள்ளிட்டவற்றில் ஈடுபாடு கொண்டவர் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று காலை சோமநாத்தின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அருகில் வசிக்கும் உறவினர்கள் அவரது வீட்டை திறந்து பார்க்கும் பொழுது சோம்நாத் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இது சம்பந்தமாக விசாரணை நடத்தும் பொழுது மதன் தான் சோம்நாத்துடன்  தங்கியிருந்ததாக தெரிவித்ததை தொடர்ந்து மதனைபிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்தில் கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆய்வு முடிந்து செல்கையில் மதன் கொலையை ஒப்புக்கொண்டு விட்டதாகவும் குடிபோதையில் நடந்த சம்பவம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறிய அவர் கல்லை கொண்டுதான் கொலை செய்திருப்பதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் செய்தியாளர்களிடம்  தெரிவித்து சென்றார்.

தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe