கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு-அதிமுக வர்த்தக அணி மாநில தலைவர் சஜீவன் கோவையில் ஆஜர்...

published 4 days ago

கோடநாடு கொலை, கொள்ளை  வழக்கு-அதிமுக வர்த்தக அணி மாநில தலைவர் சஜீவன் கோவையில் ஆஜர்...

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக,
கோவை காந்திபுரம் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில், அதிமுக வர்த்தக அணி மாநில தலைவர் சஜீவன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவில் கடந்த 
2017 ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. கோடநாடு பங்களா காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். பங்களாவில் இருந்து முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக  12 நபர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை, உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் இதுவரை 100 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட  சயான் மற்றும் அவரது  கூட்டாளிகள் தப்பி சென்ற போது, கூடலூர் அருகே வாகன சோதனையின் பிடிபட்டனர். கேரளா தப்பி சென்ற அவர்களை போலீசார் பிடித்த போது, கூடலூரை சேர்ந்த சஜீவன் அவர்களை விடுவிக்குமாறு தொலைபேசியில் தெரிவித்தாக கூறப்படுகிறது. 
சஜீவன் கோடநாடு பங்களாவில் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு அவர்களின் விருப்பத்தின் பேரில்,பங்களாவில் 
மர வேலைகள் செய்து வந்தவர். 

இதன் மூலம் அவர்களுக்கு  நெருக்கமான நபராக அதிமுகவில் வலம்வந்தார்.கடந்த ஆண்டு அவருக்கு அதிமுக வர்த்தக அணி மாநில தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டது.இந்நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலிசார் , சயான் மற்றும் அவரது கூட்டாளிகளை விடுவிக்க சொன்னது குறித்து விசாரணைக்கு  நவம்பர் 5-ம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அளித்தனர். ஆனால் 
அவர் ஆஜராகாத நிலையில், மீண்டும் சஜீவனுக்கு சம்மன் வழங்கப்பட்டு இருந்தது.
 

இதனையடுத்து இன்று சஜீவன் கோவை காந்திபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe