பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் கண்காணிப்பு தீவிரம்...

published 2 weeks ago

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் கண்காணிப்பு தீவிரம்...

கோவை: நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்லட்டு, மோப்ப நாய் உதவியுடன் ரயில் பெட்டிகளிலும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

டிச.6 - பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வழிபாட்டு தளங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி  உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் பெட்டிகள், நடைமேடைகள், வாகனம் நிறுத்துமிடங்களில் சோதனையிட்டு வருகின்றனர். மேலும் நுழைவு வாயிலிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகள் ஸ்கேனர் கருவி மூலம் முழுமையான சோதனைப் பின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் சந்தேகப்படும் நபர்களையும் போலீஸார் தனியாக அழைத்து விசாரித்து வருகின்றனர். ரயில் நிலையத்தில் சாதாரன உடையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கண்காணித்து வருகின்றனர். அதே போல கோவை மாநகரிலும் போலீஸார் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe