கோவையில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம்...

published 5 days ago

கோவையில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம்...

கோவை: கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள இந்து அறநிலைத்துறை,  கோவை மண்டல இணை ஆணையர் அலுவலகம் வளாகத்தில்,  இன்று மதியம் 12 மணியளவில் இந்து அறநிலைத்துறையில் பணியாற்றும் வரும் செயல் அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கருப்பு பேட்ச் அணிந்து  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விதிமுறைக்கு முரணாக செயல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்,  அதிகளவு பெண் செயல் அலுவலர்கள் பணிபுரிந்து வருவதால் சீராய்வு கூட்டங்களை உரிய அலுவலக பணி நேரத்தில் நடத்த வேண்டும், ஓய்வு பெற்ற செயல் அலுவலர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஈட்டிய விருப்பத்திற்கான பண பலன்களை உரிய காலத்தில் வழங்க வேண்டும், செயல் அலுவலர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe